May 05

சொத்து குவிப்பு வழக்கு; சசிகலா மனு

சொத்து குவிப்பு வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை மறு சீராய்வு செய்யக் கோரி சசிகலா தரப்பில் உச்சநீதிமன்றத்தில்  மனு தாக்கல் செய்யப் பட்டுள்ளது.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலா, அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் நான்கு ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.இதை, கடந்த பெப்ரவரி  மாதம் உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.

இதையடுத்து,சசிகலா,இளவரசி,சுதாகரன் ஆகியோர் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், சசிகலா உள்ளிட்ட மூவர் சார்பில், தங்களுக்கு அளிக்கப்பட்ட தீர்ப்பை மறு சீராய்வு செய்யக்கோரிநேற்றுமுன்தினம் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது