May 05

ஈரானில் நிலக்கரிச் சுரங்கத்தில் வெடிப்பு 22 பேர் உயிரிழப்பு

வட  ஈரானில்  நிலக்கரிச் சுரங்கமொன்றில்   இடம்பெற்ற வெடிப்பில்  22  சுரங்கத் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

மேற்படி வெடிப்பையடுத்து அந்த சுரங்கத்தின் அடியில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் முகமாக முன்னெடுக்கப்பட்டிருந்த பணி தோல்வி கண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சுரங்கத்தின் 600  மீற்றர்  ஆழத்தில் சிக்கியிருந்தவர்களை மீட்க 1400  மீற்றர் சுரங்கப் பாதை தோண்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 அதேசமயம் காணாமல் போயுள்ள 13  சுரங்கத் தொழிலாளர்களை உயிருடன் மீட்பது குறித்து சந்தேகம் நிலவுவதாக கூறப்படுகிறது.

ஸெமெஸ்டன் நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட இந்த அனர்த்தம் குறித்து அந்நாட்டு ஜனாதிபதி ஹஸன் ரோவ்கானி கடும் விசனத்தை  வெ ளிப்படுத்தியுள்ளார்.