May 05

பிரித்தானிய கோமகன் பிலிப் அரச கடமைகளிலிருந்து ஓய்வு

பிரித்தானிய கோமகன்  இளவரசர்  பிலிப் தனது அரச கடமைகளிலிருந்து ஒய்வுபெறவுள்ளதாக பக்கிங்ஹாம் மாளிகை அறிவித்துள்ளது.

கோமகனால்  சுயமாக மேற்கொள்ளப்பட்ட இந்தத் தீர்மானத்துக்கு எலிஸபெத் மகாராணியார் ஆதரவளித்துள்ளதாக அந்த மாளிகையின் பேச்சாளர் தெரிவித்தார்.

எதிர்வரும் மாதம் 96  ஆவது வயதில் காலடியெடுத்து வைக்கவுள்ள கோமகன், தற்போதிலிருந்து எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் வரையான காலத்தில் ஏற்கனவே பங்கேற்பதற்கு ஏற்பாடாகியுள்ள நிகழ்ச்சிகளில்  கலந்து  கொள்வார் எனவும் ஆனால்  புதிய அழைப்புகளை ஏற்றுக்கொள்ள மாட்டார் எனவும் அந்தப் பேச்சாளர் கூறினார்.

ஆனால் மகாராணியார் தனது உத்தியோகபூர்வ நிகழ்ச்சிகளில் தொடர்ந்து முழுமையாக பங்கேற்பார்  எனத் தெரிவிக்கப்படுகிறது.