Nov 24

கடற்றொழிலை வசப்படுத்த வடக்கு மாகாண சபையின் நியதிச் சட்டம் தயாராகிறது!

கடற்றொழிலை வசப்படுத்த வடக்கு மாகாண சபையின் நியதிச் சட்டம் தயாராகிறதுமாகாண மீன்பிடித்துறைஅமைச்சர் தெரிவிப்பு

வடக்கு கடற்றொழிலை மாகாண சபை நிர்வாகத்தின் கீழ் கொண்டுவர விரைவில் நியதிச்சட்டம் உருவாக்கப்படுவதாக என வடக்கு மாகாண மீன்பிடித் துறை அமைச்சர் கந்தையா சிவநேசன் தெரிவித்தார்.

வடக்கு மாகாண சபையின் நேற்றைய அமர்வின் நிறைவில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

 “வடக்கு மாகா­ணத்­தில் நன்­னீர் மீன்­பி­டியை அபி­வி­ருத்தி செய்­வ­தற்கு பல்­வேறு நட­வ­டிக்­கை­கள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. அமைச்­சின் அநே­க­மான செயல்­பா­டு­கள் கடற்க­ரையை அண்­டி­ய­தா­கவே காணப்­ப­டு­கின்­றன.

 கடற்­பாசி வளர்ப்­புத் திட்­டம் மாகாண அமைச்­சின் ஊடாக மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றது. அதற்கு கடற்­க­ரையை அண்­டிய பகு­தி­கள் தேவை­யாக உள்­ளன.

ஆனால் கடல் நீர் மீன்­பிடி கொழும்பு அமைச்­சின் கீழ் உள்­ளது.

அதனை வடக்கு மாகாண சபை­யின் கீழ் கொண்டு வந்­தால் அபி­வி­ருத்­திப் பணி­களை மாகாண அமைச்­சால் சிறப்­பாக மேற்­கொள்ள முடி­யும். ஆகவே அதற்­கான நிய­திச் சட்­டம் தயா­ரிக்­கும் பணி­கள் தற்­போது நடை­பெற்று வரு­கின்­றன.

நிய­திச்­சட்­டம் தயா­ரிக்­கப்­பட்டு  வடக்கு மாகாண அமைச்­சரவையில் முன்வைக்கப்படும்” என்று அவர் மேலும் தெரி­வித்தார்.