May 05

வெனிசுலாவில் தொடரும் வன்முறை ஆர்ப்பாட்டங்கள்

வெனிசுலாவில்  அந்நாட்டு அரசாங்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து  எதிர்க்கட்சியினரால்  புதிதாக நடத்தப்பட்ட  ஆர்ப்பாட்டங்களின் போது ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்குமிடையில்ட உக்கிர மோதல் இடம்பெற்றுள்ளது.

ஆரம்பத்தில்  பாராளுமன்றத்தை நோக்கி அமைதியான முறையில் சென்ற அந்த    ஊர்வலம்அதில் பங்கேற்ற முகமூடியணிந்த இளைஞர்கள்  கற்களையும் தீக்குண்டுகளையும் வீசித் தாக்குதல் நடத்த ஆரம்பித்தையடுத்து வன்முறை ஆர்ப்பாட்டமாக மாறியதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது ஆர்ப்பாட்டக்கார்களுக்கும் பொலிஸாருக்குமிடையில் இடையில் இடம்பெற்ற மோதலில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

 கடந்த ஒரு மாத காலமாக அந்நாட்டில் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்ட்டு வருகின்ற நிலையில் பொது ஒழுங்கிற்கு அச்சுறுத்தலாகவுள்ள  இந்த ஆர்ப்பாட்டங்கள் குறித்து அந்நாட்டு அரசாங்கம் கமடும் எச்சரிக்கையை விடுத்துள்ளது.

 நெடுஞ்சாலைகளை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு  8  வருட சிறைத் தண்டனை விதிக்கப்படும் என அந்நாட்டு நீதி மற்றும் உள்துறை அமைச்சர் நெஸ்டர் றிவெரல் எச்சரித்துள்ளார்.

 எதிர்க்கட்சியின் கட்டுப்பாட்டிலுள்ள பாராளுமன்றத்தை முடக்கும் வகையில் அந்நாட்டு அரசியலமைப்பை மீளமைக்க  500  அங்கத்தவர்களைக் கொண்ட அமைப்பொன்றை உருவாக்குவதற்காக அந்நாட்டு ஜனாதிபதி நிகொலஸ் மதுரோவால் அண்மையில்  முன்னெடுக்கப்பட்ட ஆயை குறித்து  பல ஆர்ப்பாட்டக்காரர்கள் சினத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.