May 05

பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தல் ; வெற்றியை உறுதிப்படுத்திய மக்ரோன்

பிரான்ஸின் ஜனாதிபதி  தேர்தலில் போட்டியிடும்  வேட்பாளரான  இமானுவேல் மக்ரோன் மேற்படி தேர்தல் தொடர்பில் இடம்பெற்ற  இறுதித் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் தேர்தலிலான தனது வெற்றியை உறுதிப்படுத்திக் கொண்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிக்கின்றன.

அந்தத் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் மையவாத கட்சியைச் சேர்ந்த மக்ரோனும் தீவிர வலது சாரிக் கட்சியைச் சேர்ந்த வேட்பாளரான  மாரின் லீ பென்னும் உக்கிர விவாதத்தில் ஈடுபட்டனர்.

 தேர்தலின் இரண்டாம் சுற்று வாக்கெடுப்பு  எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ள  நிலையிலேயே இந்தத் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் பிரான்ஸ் அரசியல் நிபுணர்களும் பத்திரிகைகளும்  கருத்துக்கணிப்பு வாக்கெடுப்புகளும்  மக்ரோன்  தனது நிலைப்பாட்டை உறுதியான முறையில்  அந்த விவாத நிகழ்ச்சியில் முன்வைத்துள்ளதாக தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.