May 05

அவுஸ்திரேலிய கல்வி அமைச்ச ர் உரை; மாணவர்கள் குறுக்கீடு

அவுஸ்திரேலிய பிரதமர் மல்கொம் டேர்ன்பல்லின் அரசாங்கத்தினது புதிய வரவுசெலவுத் திட்ட சீர்திருத்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் அந்நாட்டு கல்வி அமைச்சர் உரையாற்றிக் கொணடிருந்த மேடையின் மீது அத்துமீறி ஏறி குழப்பம் விளைவித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கான்பெராவிலுள்ள அச்சு ஊடக கழகத்தில் கல்வி அமைச்சர் சிமொன் பிர்மிங்ஹாம் உரையாற்றிக் கொண்டிருந்த போதுஆர்ப்பாட்டக்காரர்கள் மேடையின் மீது ஏறி புதிய வரவுசெலவுத் திட்ட சீர்திருத்தத்தில் பல்கலைக்கழகங்களுக்கான கொடுப்பனவில் செய்யப்பட்டுள்ள குறைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து கோஷம் எழுப்பியதுடன் கடதாசிகளை கசக்கி உரையாற்றிக் கொண்டிருந்த கல்வி அமைச்சரின் மீது வீசியெறிந்தனர்.

இதனையடுத்து பொலிஸாரால் அங்கிருந்து இழுத்துச் செல்லப்பட்ட அந்த மாணவர்கள் எச்சரிக்கை செய்யப்பட்ட பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.