Mar 06

மார்ச் 8இல் பன்னீர்செல்வம் உண்ணாவிரதம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம் குறித்து நீதி விசாரணை வேண்டும் என்று கோரி மார்ச் 8ஆம் திகதி முதல் ஓ. பன்னீர் செல்வம் உண்ணாவிரதமிருக்கப்போவதாக  முடிவு செய்துள்ளார்.

சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகே உண்ணாவிரதத்துக்கு அனுமதி கோரி பன்னீர் செல்வம் அணி அ.தி.மு.க அவைத்தலைவர் மதுசூதனன் பொலிஸாரிடம் விண்ணப்பித்துள்ளார்.

இந்நிலையில் மார்ச் 8ஆம் திகதி முதல் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த ஓ.பன்னீர் செல்வம் அணிக்கு பொலிஸார் இன்று அனுமதி அளித்துள்ளனர்.

ராஜரத்தினம் மைதானத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதி கிடைத்துள்ளதாக முன்னாள் அமைச்சர் மா.பா பாண்டியராஜன் கூறியுள்ளார்.