May 04

ஐ.பி.எல் திருவிழா; கொல்கத்தாவை வீழ்த்தியது புனே

ஐ.பி.எல். தொடரின் 41ஆவது போட்டி கொல்கத்தா நைட்ரைடர்ஸ், ரைசிங் புனே சூப்பர் ஜெயிண்ட் அணிகளுக்கு இடையிலான கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. 

இதில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற புனே அணித்தலைவர் ஸ்மித் முதலில் பந்து வீச தீர்மானித்தார்.

இதனையடுத்து கொல்கத்தா அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. ஆரம்ப வீரர் நரேன் முதல் ஓவரின் 6 பந்துகளை சந்தித்து ஓட்டமெதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

பின்னர் அதிரடியாக விளையாட முற்பட்ட கம்பீர் (24) ஜாக்சன்(10), யூசப் பதான்(04) மணிஷ் பாண்டே, டி கிரண்ட் ஹோம் (36), சூர்ய யாதவ் (30) சிறப்பாக விளையாடி ஓட்டங்களைச் சேர்த்தனர். 

இறுதியில் கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 155 ஓட்டங்களைச் சேர்த்தது.  

புனே அணி தரப்பில் உனகண்ட் 2 முக்கிய விக்கெட்டுகளை சாய்த்தார். அதேபோல், வாஷிங்டன் சுந்தரும் 2 ஓவர்கள் மட்டும் வீசி 2 விக்கெட்டுகளை  கைப்பற்றினார். 

இதனையடுத்து 156 என்ற இலக்குடன் களமிறங்கிய புனே அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக திருப்பதி மற்றும் ரஹானே பேட்டிங் செய்தனர். 

தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய திருப்பதி பவுண்டரிகளும், சிக்சர்களுமாக விளாசினார். இவரை கட்டுப்படுத்த கொல்கத்தா பவுலர்கள் திணறினர். 11ஓட்டங்களில்; ரஹானே வெளியேறினாலும் திருப்பதி நின்று ஓட்டங்களைக் குவித்தார். 

அணித்தலைவர் ஸ்மித் (09), மனோஜ் திவாரி (08) ஆட்டமிழந்தனர். கடந்த போட்டியில் சதமடித்த ஸ்டோக்ஸ் (14) தோனி (05) பின் ஆட்டமிழக்கவும் பின்வரிசை  வீரர்கள் திருப்பதிக்கு தகுந்த ஒத்துழைப்பு வழங்க, 19.2 ஓவர்களில் புனே அணி 6 விக்கெட் இழப்பிற்கு 158 ஓட்டங்களை எடுத்து வெற்றி பெற்றது. 

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய திருப்பதி 52 பந்துகளில் 93 ஓட்டங்களை எடுத்து ஆட்டநாயகன் விருதை வென்றார். 

கொல்கத்தா அணியின் பந்துவீச்சாளர்களில் வோக்ஸ் 3 விக்கெட்டுகளும், உமேஷ் யாதவ், சுனில் நரைன், குல்தீப் யாதவ் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.