May 04

ஐ.பி.எல் திருவிழா; ஐதாபாத்தை வென்றது டெல்லி

ஐ.பி.எல். தொடரின் 40போட்டி டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்றது. 

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிராக டாஸ் வென்ற டெல்லி டேர்டெவில்ஸ் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. 

அதன்படி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் வோர்னர், தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

வோர்னர் (30) தவான் (28) கேன் வில்லியம்சன் (24) ஆட்டமிழக்க  4ஆவது வீரராக களம் இறங்கிய யுவராஜ் சிங் 41 பந்தில் 70 ஓட்டங்களைக் குவித்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். 

இவருடன் ஹென்றிக்ஸ் 18 பந்தில் 25 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுக்க  சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 185 ஓட்டங்களைக் குவித்துள்ளது.

பின்னர், 186 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சஞ்சு சாம்சன், கருண் நாயர் துடுப்பெடுத்தாடினர்.

தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடி இருவரும் ஓட்டங்களைக் குவித்தனர். ஐதராபாத் அணி வீரர்களின் பந்து வீச்சை சிதறடித்த இருவரும் அணிக்கு சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். 

24ஓட்டங்களில்; சாம்சனும் 29 ஓட்டங்களில் கருண் நாயரும் ஆட்டமிழக்க பின்னர் களமிறங்கிய ரிஷி பாந்த் ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடியாக விளையாடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

இறுதியில் 19.1 ஓவர்களில் டெல்லி அணி 189 ஓட்டங்களை எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.