May 04

15 வயது சிறுமியை 4-வது திருமணம் செய்ய நினைக்கும் கணவனை தடுக்க ஒன்று சேர்ந்த 3 மனைவிகள்

முத்தலாக் முறையில் விவா கரத்து செய்வதற்கு முஸ்லிம் பெண்கள் மத்தியில் கடந்த சில ஆண்டுகளாக கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில் உ.பி.யில் ஒரே நபரால் பாதிக்கப்பட்ட மூன்று பெண்கள் அவர் நான்காவதாக திருமணம் புரிவதை தடுக்க ஒன்றிணைந்துள்ளனர்.

உ.பி.யின் பைரேச் நகரைச் சேர்ந்தவர் தானிஷ் (29). கார் மெக்கானிக்கான இவருக்கு 2013-ல் திருமணம் நடைபெற்றது. ஒரு வருடத்தில் முத்தலாக் முறை யில் மனைவியை விவாகரத்து செய்த தானிஷ், பிறகு இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

சில மாதங்களில் இவரை விவாகரத்து செய்த தானிஷ், பிறகு 3-வது முறையாக ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டார். இவரையும் சில மாதங்களில் விரட்டிய தானிஷ் தற்போது நான் காவதாக 15 வயது பெண்ணைக் கடந்த வாரம் மணம் முடிக்க முயன்றார். ஆனால் இதை அறிந்த முதல் 3 மனைவிகளும் ஒன்றிணைந்து பேசி, திரு மணத்தை தடுத்து நிறுத்தினர்.

மேலும் பைரேச் நகர காவல் நிலையத்தில் தானிஷ் மீது நேற்று முன்தினம் புகார் அளித்துள்ளனர். இதில், தானிஷ் தங்களை ஆபாசப் படம் எடுத்து தவறான வழிக்கு தூண்டியதாக கூறியுள்ளனர். இவர் மூன்று பெண்களையும் துன் புறுத்தியதாக வழக்கு பதிவு செய்த போலீஸார் தானிஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.