May 04

வட மாகாண சுற்றுலா நியதிச்சட்டம் குறித்து பாராளுமன்ற நிலைப்பாடு கோரப்பட்டுள்ளது

வடக்கு மாகாணத்துக்குரிய சுற்றுலா நியதிச்சட்டம் தொடர்பில் அச்சபை பாராளுமன்றத்தின் நிலைப்பாட்டைக் கோரியுள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார். பாராளுமனறத்தில் நேற்று புதன்கிழமை சபாநயகர் அறிவிப்பு நேரத்தின்போது தனது அறிவிப்பை வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அந்த அறிவிப்பில் மேலும் சபாநாயகர் கரு ஜயசூரிய மேலும் தெரிவிக்கையில், 

பாராளுமன்ற நிலையியல்கட்டளையின் 46(அ)3(அ) பிரிவின்கீழ் இந்த அறிவிப்பு விடுக்கப்படுகின்றது. வடக்கு மாகாணத்துக்குரிய சுற்றுலா நியதிச்சட்டம் தொடர்பில் அச்சபை பாராளுமன்றத்தின் நிலைப்பாட்டைக் கோருகின்றது. நியதிச்சட்டவரைவின் பிரதி பாராளமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் வடமாகாண சபையின் இந்த கோரிக்கையை சர்வதேச விவகாரங்கள் தொடர்பான பாராளுமன்றக்குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படுத்தப்படவுள்ளது என்றார்.