May 04

ஐ.பி.எல்.திருவிழா; குஜராத்தின் கனவைத் தகர்த்த ஸ்ரோக்ஸ்

ஐ.பி.எல்.தொடரின்  39ஆவது போட்டியில் குஜராத் லயன்சை வீழ்த்தி புனே அணி பதிலடி கொடுத்தது.

புனேயில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய குஜராத் லயன்ஸ் 19.5 ஓவர்களில் 161 ஓட்டங்களைப் பெற்று சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

மெக்கல்லம் 27 பந்தில் 45 ஓட்டங்களையும் (5 பவுண்டரி, 2 சிக்சர்) இஷான் கிஷன் 31 ஓட்டங்களையும் எடுத்தனர்.

இம்ரான் தாகீர், ஜெய்தேவ் உனன்கட் தலா 3 விக்கெட் கைப்பற்றினார்கள்.

பின்னர் விளையாடிய புனே அணி ஸ்டோக்ஸ் சதத்தால் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணி 19.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 167 ஓட்டங்களை எடுத்தது.

பென் ஸ்டோக்ஸ் அதிரடியாக விளையாடி சதம் அடித்தார். அவர் 63 பந்தில் 103 ஓட்டங்களை (7 பவுண்டரி, 6 சிக்சர்) டோனி 26 ஓட்டங்களை எடுத்தனர்.

பசலி தம்பி, சங்வான் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

புனே அணி பெற்ற 6-வது வெற்றியாகும். அந்த அணி ஏற்கனவே குஜராத்திடம் தோற்றது. அதற்கு இந்த ஆட்டத்தில் வென்று புனே அணி பதிலடி கொடுத்தது.