May 04

ஆண்டுக்கு 12,000 க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை

கடந்த, 2013ஆம் ஆண்டு முதல் ஆண்டுக்கு 12,000 க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

விவசாயிகள் தற்கொலையை தடுக்க அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பாக பொதுநல வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

இதன் போது  மத்திய அரசு நீதிமன்றத்தில்  அளித்த புள்ளிவிபரத்தின்படி, 2015ஆம் ஆண்டில் விவசாயிகள் தற்கொலையில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது.


மகாராஷ்டிராவில் 4291, கர்நாடகாவில் 1569, தெலுங்கானா - 1400, .பி.,யில் - 1290, சட்டீஸ்கர் - 954, ஆந்திரா - 916, தமிழகம் - 606 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

2013ஆம் ஆண்டு 11,772 ஆக இருந்த விவசாயிகள் தற்கொலை 2014 ல் 12,360 ஆக அதிகரித்துள்ளது.