Nov 21

கற்கை நெறிகள் இடம்பெறாமையால் ஏற்பட்ட இழப்பை ஈடு செய்வதற்கு வேலைத்திட்டம்

பல்கலைக்கழக மாணவர்களுக்கு இந்த வருடத்தில குறிப்பிட்ட படி கற்கை நெறிகள் இடம்பெறாமையால் ஏற்பட்ட இழப்பை ஈடு செய்வதற்கு தேவையான வேலைத்திட்டம் ஒன்று வகுக்கப்பட்டுள்ளது.

ருஹூனு பல்கலைக்கழக பீடாதிபதி பேராசிரியர் சமன் விமலசுந்தர இத்தகவலைத் தெரிவித்தார்.

இதேவேளை பல்கலைக்கழகங்களின் வைத்தியபீட கல்வி நடவடிக்கைகள் நேற்று  ஆரம்பமானதாக பீடாதிபதிகள் தெரிவித்துள்ளனர். மாணவர்கள் பயிற்சி நடவடிக்கையை போன்று கல்வி நடவடிக்கையிலும் ஆர்வத்துடன் கலந்து கொண்டதாக இவர்கள் தெரிவித்துள்ளனர். 

களனி பல்கலைக்கழக வைத்திய பீட விரிவுரையாளர் சங்கத்தின் தலைவர் பேராசிரியர் ரணில் பெர்னாண்டோ கருத்து தெரிவிக்கையில், அனைத்து வைத்திய பீடங்களிலும் மாணவர்கள் நேற்றைய தினம் வகுப்புகளுக்கு சமூகமளித்ததாக தெரிவித்தார்.