Nov 21

சர்வேஸ்வரன் போலி தேசிய நாடகத்தை ஆடினார் : சுமந்திரன்

13 ஆவது அரசியல் யாப்பை ஏற்றுக்கொண்ட கட்சியைச்  சேர்ந்த  வடமாகாண கல்வி அமைச்சர்  எஸ். சர்வேஸ்வரன், தேசிய கொடியை ஏற்ற மறுத்து போலி தேசிய நாடகத்தை ஆடியதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின்  நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

தேசியத்திற்கும் போலி தேசியத்திற்கும் வித்தியாசம் உள்ளதாக  குறிப்பிடும்    நாடாளுமன்ற உறுப்பினர்,  அதனை புரிந்துகொள்ளும் காலம்  தற்போது காணப்படுவதாக  குறிப்பிட்டார்.

மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் அஸ்லி நிமலன் சௌந்தரநாயகத்தின் 17ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு   முறக்கொட்டான்சேனை தேவபுரம் இலங்கை கிறிஸ்தவ சமுக மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய தமிழ்த் தேசிய கூட்டமைப்பின்  நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.