May 04

பிரதமருக்கு தமிழக முதல்வர் கடிதம் மூலமாக கோரிக்கை

இலங்கை கடற்படையால் பிடித்துச் செல்லப்பட்ட 5 தமிழக மீனவர்கள் மற்றும்  134 படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் கடிதம் மூலமாக கோரிக்கை விடுத்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடிக்கு இது தொடர்ப்பில் நேற்று அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறி யிருப்பதாவது: ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் இருந்து கடந்த 30ம் ிகதி மீன்பிடிக்க சென்ற 5 மீனவர்களையும், அவர்களது நாட்டு படகையும் இலங்கை கடற்படையினர் பிடித்துச் சென்றுள்ளனர்.

5 மீனவர்களும் யாழ்ப்பாணம் கொண்டு செல்லப்பட்டு நீதிமன்ற வைக்கப்பட்டுள்ளனர். பாரம்பரிய பாக் ஜலசந்தி பகுதியில் மீன்பிடிப்பது தொடர்பாக இருநாட்டு அரசுகளும் தூதரகம் மூலம் மேற்கொண்டு வரும் முயற்சிகளை முறியடிக்கும் வகையிலேயே இதுபோன்ற சம்பவங்கள் நடக்கிறது. இந்த நடவடிக்கை தமிழக மீனவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் தற்போது 134 தமிழக மீன்பிடி படகுகள்,இயற்கை சீற்றங்கள் காரணமாக சேதமடைந்து வருகிறது. படகுகளை விடுவிப்பது பற்றி பரிசீலிப்பதாக இலங்கை அரசு தெரிவித்துள்ள நிலையில், இதுகுறித்து இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை.


அண்மையில் இருநாட்டு பிரதமர்களும் சந்தித்து பேசியபோதும், இந்த பிரச்சினை குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இந்திய அரசு உடனடியாக இலங்கை உயர் அகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, படகுகளை விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

பிரதமர் இந்த விவகாரத்தில் தலையிட்டு 5 மீனவர்களையும் அவர்களது படகையும், ஏற்கனவே இலங்கையில் உள்ள 133 படகுகளையும் விடுவிக்க தூதரகம் மூலமாக தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.