May 04

முதல்வர் எடப்பாடி ஆட்சி தொடர மொட்டை

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் நலத்திட்டங்கள் தொடர வேண்டும்.அவரது ஆட்சி நீடிக்க வேண்டும்  என்று வலியுறுத்தி வடபழனி முருகன் கோயிலில் முடி காணிக்கை செலுத்தி வேண்டுதல் நிறைவேற்றியுள்ளனர் தமிழ்நாடு மதுக்குடிப்போர் விழிப்புணர்வு சங்கத்தினர்.

இதுதொடர்பாக அச்சங்கத்தின் தலைவர் செல்லபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழக விவசாயிகளையும் தமிழக மண்வளத்தையும் காத்திடும் வகையில் சிறு கனிம வளத்துறையின் மூலம் விவசாயிகள் ஆறு, குளங்களில் உள்ள வண்டல் மண்ணை இலவசமாக எடுத்து விவசாய நிலத்தை வளமாக்கிட முதல்வல் எடப்பாடி ஆணையிட்டுள்ளார். 'நீரா' என்ற பெயரில் பனை, கள்ளு, இறக்க விவசாயிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளார்.

தடை செய்யபட்ட ஏரி, குளங்களில் கோடை காலங்களில் லண்டல் மண்ணை எடுத்துச் சென்று விவசாய நிலங்களில் போடுவதால் விவசாய நிலங்களில் இயற்கை விவசாயம் செழிப்பாக இருந்தது. ஆனால் 40 ஆண்டுகளாக கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் ஏரி குளங்களில் மண் எடுக்க தடை போட்டதால் கெமிக்கல் உரங்கள் போட்டு மண்ணை உரமேற்றியதால் இயற்கை விவசாயம் அழிந்து போனது.


இத்தகைய நிலையை போக்கிட விவசாயிகளுக்கு தேவையான உரமிக்க ஏரி குளத்து மண்ணை அள்ளி செல்ல எடப்பாடி ஆணையிட்டுள்ளார். அதற்காகத்தான் இவருடை நல்ல திட்டங்கள் மேலும் வளர வடபழனி முருகனிடம் வேண்டி முடி காணிக்கை செய்துள்ளோம் என்று  அதில் கூறப்பட்டுள்ளது.