Nov 21

பெற்றோர் தினமும் சாதனையாளர்கள் கௌரவிப்பும்

மு/தண்டுவான் அ.த.க பாடசாலையில் பெற்றோர் தினமும் சாதனையாளர்கள் கௌரவிப்பும்நிகழ்வு 2017.11.20 ஆம் திகதி பாடசாலை பிரதான மண்டபத்தில் பாடசாலை அதிபர்திரு.கு.பஞ்சலிங்கம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதமவிருந்தினராக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி ஸ்ரீஸ்காந்தராசாஅவர்களும் சிறப்பு விருந்தினர்களாக திரு.பா.கண்ணதாசன் கணக்காளர் துணுக்காய் வலயம்,திரு.த. பங்கயற்செல்வன் கோட்டக்கல்வி அதிகாரி, ஒட்டுசுட்டான், மற்றும் கௌரவவிருந்தினராக அயற்பாடசாலை அதிபர்கள், முன்பள்ளி ஆசிரியர்கள், கிராம சேவகர்கள்ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.