May 04

இரணை தீவு விவகாரம்; இம்மாத இறுதிக்குள் விசேட கூட்டம்

இரணைதீவில் பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகளை விடுவிப்பது குறித்து ஜனாதிபதி  பிரதமர்  பாதுகாப்பு தரப்பினர் உட்பட அனைவரின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள  சிறுவர் விவகார இராஜங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் இம்மாத இறுதிக்குள் விசேட கூட்டம் நடத்தப்பட்டு உரிய தீர்வு எடுக்கப்படுமெனவும் குறிப்பிட்டார்.

இரணை தீவு மக்கள் தமது சொந்த நிலங்களை விடுவிக்க கோரி நேற்று முன்தினம் முதல் உண்ணாவிரதப்போராட்டத்தை ஆரம்பித்துள்ள நிலையில்  அது தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே சிறுவர் விவகார இராஜங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்  மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்

அண்மையில் இரணைதீவுக்குச் செல்ல கடற்படை எனக்கு வசதி ஏற்படுத்திக் கொடுத்தமைக்கு நன்றி தெரிவிக்கின்றேன். 1990ஆம் ஆண்டு இரணை தீவு மற்றும் சிறுதீவு ஆகிய பிரதேசங்களில் சுமார் 20 குடம்பங்கள் வாழ்ந்து வந்துள்ளன அவர்களின் பாரம்பரிய தொழிலாக மீன்பிடி காணப்படுகின்றது.

முன்னாள் ஜனாதிபதி பிரேமதாஸவின் காலப்பகுதியில் அவர்களுக்கான வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டனஒரு குடும்பத்திற்கு அரை ஏக்கர் என்ற வகையில் சுமார் 50ஏக்கர் காணியில் அவர்களுக்கான வீடுகள் தேவாலயம்  கோயில் உட்பட அனைத்தம் அங்கு அமைந்துள்ளன.

1992ஆம் ஆண்டு யுத்தகாலப்பகுதியில் கடற்படையினரால் அத்தீவில் உள்ள 150மீன்பிடிக்குடம்பங்களும் சிறு தீவுகளில் உள்ள 50 குடும்பங்களும் இரணை மாநகரிலே மீள்குடியேற்றப்பட்டனர்.

அந்த 200குடும்பங்கள் தற்போது 400குடும்பங்கள் ஆகியுள்ளனகடந்த 24வருடங்களாக இரணை மாநகரில் சொல்லெணா துயரங்களுக்கு மத்தியில் மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இம்மக்களை மீண்டும் இரணை தீவு மற்றும் சிறுதீவில் குடியமர்த்தினால் மாத்திரமே அவர்களுக்கான நிரந்தர வாழ்வாதாரத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்அந்த வகையில் நல்லாட்சி அரசாங்கம் ஆட்சியை ஏற்ற பின்னர் இரணை தீவு மற்றும் சிறு தீவு மீன்பிடிக்கு அனுமதிக்கப்பட்டாலும் இரணை மாநகரிலிருந்து சிறு தீவுக்கு செல்வதற்கு 20லீற்றர் எரிபொருளுக்கு மேல் செலவாகின்றதுஇதனால் எரிபொருளுக்கே அவர்கள் வாழ்வாதார வருமானத்தை செலவழிக்க வேண்டிய நிலைமை காணப்படுகின்றது.

நான் இரணை தீவுக்குச் சென்ற போது அங்குள்ள பாடசலைகள்  கோயில்கள்  தேவாலயங்கள் என அனைத்தும் புனரமைக்கப்படாதுள்ளனடலிலிருந்து 5 கிலோமீற்றர் தூரத்தில் இந்த மக்களின் வீடுகள் அமைந்துள்ளன.  தனை விட ஏனைய பகுதிகளை கடற்படை சுவீகரித்து வைத்துள்ளன.

ந்த 400 குடுமப்ஙக்ளில் 95குடும்பங்கள் பெண்தலைமைத்துவக் குடம்பங்களாகும்வாழ்க்கையில் போராடி கடலுக்குச் செல்ல முடியாது நண்டுகளையும் கணவாய்களையும் பிடித்து விற்பனை செய்தும்  வாழ்க்கையை நடத்தி வருகின்றார்கள்.

இந்த 400 குடும்பங்களில் எவற்றுக்கும் தரமான மீன்பிடி உபகரணங்களோ பொருளதார உதவிகளோ இல்லைவர்களது ஒரே கனவான சிறுதீவுக்கு செல்ல வேண்டும் என்பதையே என்னிடத்தில் கோரியுள்ளனர்.

இந்த விடயங்களை கவனத்தில் கொண்ட உரிய நடவடிக்கைகளை விரைவாக நடவடிக்கைகளை மேற்கொண்டு உரிய தீர்வுகளை வழங்க வேண்டும் என ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேன  பிரதமர் ரணில் விக்கிரமசிங்க  கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் மகிந்த அமரவீர  பாதுகாப்பு இராஜங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன  பாதுகாப்புச்செயலாளர் கருணாசேன ஹெட்யாரச்சி  கடற்படைத்தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரட்ன  காங்கேசன்துறை மற்றும் முல்லைத்தீவு கடற்படை கட்டளைத்தளபதி ஆகியோருக்கு எழுத்து மூலமாக அறிவித்துள்ளேன்.

அதுமட்டுமன்றி கடந்த 24ஆம் திகதி பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற வடக்கு கிழக்கு காணி விடுவிப்பு குறித்த அமைச்சர் சுவாமிநாதன் தலைமையிலான கூட்டத்தில் இரணைதீவு மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் பிரஸ்தாபித்திருந்தேன்.

இதன்போது பாதுகாப்புச் செயலாளரும்  கடற்படைத்தளபதியும் சாதகமான சமிக்ஞைகளை வெளியிட்டிருந்தனர்குறிப்பாக முள்ளிக்குளம் கடற்படை முகாம் தொடர்பான பிரச்சினையை தீர்ப்பதற்காக கடற்படைத்தளபதி நேரில் விஜயம் செய்வதாகவும் அதனையடுத்து இரணைதீவு விடயம் தொடர்பாக கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் கடற்படைத்தளபதி உள்ளிட்ட அதிகாரிகளின் பங்கேற்புடன் கூட்டமொன்று நடத்தப்பட்டு தீர்மானிப்பதாகவும் இணக்கப்பாட்டு ட்டப்பட்டது.

அதற்கமைய கடந்த சனிக்கிழமை அன்று முள்ளிக்குளம் மக்களின் காணிகள் அவர்களிடத்தில் மீளக் கையளிக்கப்பட்டுள்ளனஆகவே இம்மாத இறுதிக்குள் திட்டமிட்டபடி இரணைதீவை விடுவிப்பது குறித்த தீர்மானம் எடுப்பதற்கான கூட்டம் நடத்தப்பட்டு சாதகமான முடிவுகள் எடுக்கப்படும்ஆகவே மக்கள் பொறுமைகாக்க  வேண்டும் என்றார்