Mar 05

11 பேர் கடத்தல் விவகாரம்: லெப்டினன் கொமாண்டர் தலைமறைவு

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வைத்து 2008 ஆம் ஆண்டு  5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் கடத்தப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்ட சம்பவத்துடன் நேரடியாக தொடர்பு பட்டவர்களை தண்டனை சட்டக் கோவையின் 296 ஆவது அத்தியாயத்துக்கு அமைவாக கைது செய்ய சட்ட மா அதிபர், கோட்டை நீதிவானின் உத்தர்வுக்கு அமைய ஆலோசனை வழங்கியுள்ள நிலையில் கைது நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்ப்ட்டுள்ளன. 

அதன்படி கடந்த வெள்ளியன்று இரு கடற்படையினர் கைது செய்யப்ப்ட்ட நிலையில், கப்பம் பெறும் நோக்கில் இக்கடத்தல்களினை முன்னெடுத்த கடற்படை குழுவை வழி நடத்திய லெப்டினன் கொமான்டர் தர அதிகாரியொருவர் தலைமறைவாகியுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவு தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ். மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நட ராஜா ரவி ராஜ் படுகொலை விவகாரத்தில் நிரபராதியாக கருதப்பட்டு விடுதலைச் செய்யப்ப்ட்ட மேற்படி லெப்டினன் கொமாண்டரை, ஐந்து மாணவர் உள்ளிட்ட கடத்தல்கள் தொடர்பில் கைது செய்ய வேண்டிய நிலையில் அவர் தலைமறைவகியுள்ளதாக புலனயவுப் பிரிவு தகவல்கள் தெரிவித்தன.

இந் நிலையில் குறித்த லெப்டினன் கொமாண்டர் நட்டை விட்டு தப்பிச் செல்லாத வகையில் விமான நிலையங்களை அறிவுறுத்தியுள்ளதாகவும்,  கண்கனிப்புக்களை அதிகரித்துள்ளதாகவும் புலனயவுப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளன.