May 03

பாதுகாப்பமைச்சர் பாராளுமன்றத்திற்குப் பிழையான தகவல்களை வழங்கினாரா?

கனேடியப் பாதுகாப்பமைச்சர் ஹர்ஜித் சஜான் பாராளுமன்றத்திற்குப் பிழையான தகவல்களை வழங்கினாரா என்று முடிவு செய்யுமாறு மத்திய பழமைவாதக் கட்ட்சியினர், சபாநாயகர் Geoff Regan  அவர்களிடம் வேண்டுகொள் விடுத்துள்ளனர்.

குவைத் நாட்டிலுள்ள கனேடியப் படையினருக்கு வழங்கப்பட்ட வரிச்சலுகைகளை இரத்துச் செய்தமைக்கு முன்னைய பழமைவாதக் கட்சி அரசே பொறுப்பு எனப் பாதுகாப்பமைச்சர் ஹர்ஜித் சஜான் கூறியிருந்தார்.  ஆனால் அந்த விடயத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள், இந்த வரிச்சலுகை லிபரல் அரசினாலேயே இரத்துச்செய்யப்பட்டது எனத் தெரிவிப்பதாக பழமைவாதக் கட்சியினர் சபாநாயகர் Geoff Regan  அவர்களிடம் சுட்டிக்காட்டினர். இந்த விடயத்தில் அரசின் பதில் கிடைத்தபின் தான் தீர்ப்பை வழங்கப் போவதாக  சபாநாயகர் அறிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் மேற்கொள்ளப்பட்ட “மெடுசா (Medusa) “   எனப் பெயரிடப்பட்ட பாரிய இராணுவ நடவடிக்கையின் “நிர்மாண கர்த்தா” (Architect) தானே எனத் தெரிவித்திருந்ததன் மூலம் பாதுகாப்பமைச்சர் சர்சைக்குள்ளாகி உள்ளார். அவர் இது தொடர்பாக இரு தடவைகள் பகிரங்க மன்னிப்புக் கோரியுள்ளபோதிலும், அவர் தனது பதவியில் இருந்து இராஜினாமச் செய்யவெண்டும் என எதிர்க்கட்சி தலவர் றோனா அப்ரோஸ் கோரியுள்ளார்.

பிழையான தகவல்களை வழங்குவதை  பாதுகாப்பமைச்சர் ஒரு வழமையாகக் கொண்டுள்ளார் என பழமைவாதக் கட்சியினர்  கூறுகின்றனர்.