Nov 17

சுயலாபத்துக்காய் அதிகாரத்தைப் பயன்படுத்தும் நம் அரசியல் தலைமைகள்

கிழக்கில் வாழும் நாம்  எத்தனையோ பிரச்சினைகளுக்கு   தினந்தோறும் முகங்கொடுத்து வருகின்றோம்,

எம் சமூகம் ரீதியாக  எழும் பிரச்சினைகளுக்கான  தீர்வை பெற்றுக் கொள்ளவே நாம்  எமக்குள்  சிலரை பிரதிநிதிகளாக  தெரிவு  செய்து பாராளுமன்றத்துக்கு  அனுப்புகின்றோம்.

ஆனால் இன்று அவர்களோ தமது பைகளை  நிரப்ப  முயற்சிக்கின்றனரே தவிர எமது சமூகத்தின்  உரிமைகளை  வென்றெடுப்பதற்கான  முயற்சிகளை  அவர்கள் முயற்சிப்பதில்லை என்பதே எம் சமூகத்தின் இன்றைய அவல நிலைக்கு காரணமாய் அமைந்துள்ளது, 

இதனால் பாராளுமன்றத்தில் உள்ள எமது  ஊமைகளை நாம்  நம்பாமல் இன்று நாமே எமது பிரச்சினைகளுக்காய் குரல் கொடுக்க வேண்டிய நிலை  ஏற்பட்டுள்ளது, 

இந்நிலையில் தான் எனக்கு அண்மையில்  மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்   அலிசாஹிர்  மௌலானா அவர்களும் ஆளுனருக்குமிடையிலான  சந்திப்பொன்று பிரதான  கொந்தராத்துக்காரரான நளீம் என்பவரின் இடம்பெற்றமைக்கான புகைப்படங்களை  எனக்குமுகப்புத்தகத்தில் காணக்கிடைத்தது.

இந்த  சந்திப்பின் பின்னர்  நளீம் என்பவருக்கு ஏறாவூர் ஆற்றங்கரையோர  வீதிக்கான ஒரு  கோடி ரூபா பெறுமதியான கொந்தராத்தும் கிடைக்கப் பெற்றுள்ளது, 

ஆளுனருடன் கதைத்து  கொந்தராத்துக்களை பெற்றுக் கொள்ள முடிந்த உங்களுக்கு ஏன் நம் சமூகத்தின் பிரச்சினைகள்  குறித்து தீர்வினைப் பெற்றுக்  கொடுக்க முடியவில்லை,

40 புள்ளிகளுக்கு மேல் பெற்றுக் கொண்ட பட்டதாரிகள் வீதியோரங்களில் நின்று போராடுகின்றனர்,எமது மாகாணத்திலேயே நியமனங்களைப் பெற்றுத் தருமாறு எமது சமூகப் பெண் ஆசிரியர்களும் ஆசிரியர்களும் போராடினார்கள்,மாயக்கல்லிமலையில் வைத்த சிலை வைத்தபடி இருக்கின்றது,

இதையெல்லாம் பேசீ தீர்வொன்றைப்  பெற்றுக் கொடுக்க நேரமில்லை,தேநீர் அருந்தி  தமது   பக்கற்றை நிரப்ப கொந்தாரத்துக்குமாத்திரம் மண்டியிட நேரமுண்டு,

நீங்கள் உங்கள்  சுயலாபங்களுக்காக அதிகாரத்தில் உள்ளவர்களிடம் மண்டியிடுவதால்தான் எங்கள் பிரச்சினைகளை பேசுவதற்கு உங்களுக்கு தைரியமில்லாமல் இருக்கின்றது,

வடிகான்கள்,வீதிகள் மற்றும் சில வீடமைப்புத் திட்டங்கள் என நீள்கின்றது உங்கள்  சுயலாப அரசியலுக்கான கொந்தராத்துக்களின் பட்டியல், 

முஸ்லிம் தலைமைகளே  உங்கள் சுயலாபங்களுக்காக நீ்ங்கள் மண்டியிடுவதால் தான் எம் சமூகம்  இன்று தலை குனிந்து நிற்பது எமக்கு வேதனையளிக்கின்றது