Mar 05

கொரிய மொழிப்பரீட்சைக்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் 14 முதல்

கொரிய மொழி விருத்தி பரீட்சைக்கான விண்ணப்ப விநியோகம் எதிர்வரும் 14ஆம் திகதி முதல் 17ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளது.

குறிப்பிட்ட தினங்களில் நாடுபூராகவும் அமைந்துள்ள பணியகத்தின் மாகாண காரியாலயங்கள், மாவட்ட பயிற்சி நிலையங்களில் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம்.

விண்ணப்பங்கள் அனுராதபுரம்,பதுளை, குருணாகலை,கண்டி, இரத்தினபுரி மற்றும் வவுனியாவில் அமைந்துள்ள பணியகத்தின் மாகாண காரியாலயங்களிலும்

காலி,திருகோணமலை, மதுகமை, அம்பாறை,மட்டக்களப்பு, சிலாபம், தம்புள்ள , யாழ்ப்பாணம், பொலன்னறுவை மற்றும் தங்கல்லயில் அமைந்துள்ள பணியகத்தின் பயிற்சி நிலையங்கள் மற்றும் கட்டு நாயக்கவில் அமைந்துள்ள சகனபியச நிலையத்திலும் விநியோகிக்கப்படுகின்றன.

கொரிய மொழி பரீட்சை எதிர்வரும் ஏப்பரல் மாதம் இடம்பெறவுள்ளது. இதுதொடர்பாக மேலதிக விடயங்களை பணியகத்தின் இணையத்தலமான  www.slbf.lk என்ற முகவரியில் பெற்றுக்கொள்ளலாம்.