Mar 05

படகொன்றில் இந்தியாவுக்குள் சென்ற தமிழ்த் தம்பதியர் முகாமில்வைத்து கைது

சட்டவிரோதமான முறையில் படகொன்றில் இந்தியாவுக்குள் செல்ல முயன்ற மட்டக்களப்பைச் சேர்ந்த ஜோடி ஒன்று கைது செய்யப்பட்டிருக்கின்றது. சனிக்கிழமை இரவு தமிழகப் பொலிஸார் இவர்களைக் கைது செய்தனர்.

கைதானவர்கள் வீ.தர்மகுமார் (37), நியின்ரூஷா (33) என அடையாளங்காணப்பட்டுள்ளனர். இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள தங்கச்சிமடம் பகுதியில் வெள்ளிக்கிழமை வந்திறங்கிய இவர்கள் சனிக்கிழமை திருமங்களம் பகுதியிலுள்ள முகாம் ஒன்றில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

மதுரை பொலிஸார் இவர்களைத் தடுத்துவைத்து விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றார்கள்.