May 02

சிவகார்த்திகேயன் படத்துக்காக சிலம்பம் கற்றுக் கொண்ட சமந்தா

பொன்.ராம் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தின் கதாபாத்திரத்திற்காக சிலம்பம் கற்றுக் கொண்டுள்ளார் சமந்தா.

சில நாட்களுக்கு முன்பு உடற்பயிற்சிக் கூடத்தில் சிலம்பம் சுற்று போன்ற வீடியோ ஒன்றை வெளியிட்டார் சமந்தா. இந்த வீடியோ பதிவு வைரலாக பரவியது. மேலும் எந்த படத்துக்காக என்ற கேள்வியும் எழுந்தது.

தற்போது பொன்.ராம் - சிவகார்த்திகேயன் இணையும் படத்துக்காக தான் சிலம்பம் கற்றுக் கொண்டுள்ளார் சமந்தா. இப்படத்தின் படப்பிடிப்பு, 'வேலைக்காரன்' படப்பிடிப்பு முடிந்தவுடன் தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

ஒளிப்பதிவாளராக பாலசுப்பிரமணியம், இசையமைப்பாளராக இமான், பாடலாசிரியராக யுகபாரதி, கலை இயக்குநராக முத்துராஜ், சண்டைப் பயிற்சியாளராக அனல் அரசு, எடிட்டராக விவேக் ஹர்ஷன், என படக்குழுவினர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்கள்.

24 ஏ.எம் ஸ்டூடியோ நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு இடங்களை தேர்வு செய்து முடித்துள்ளது படக்குழு.