May 02

ஆஸ்திரேலியாவில் இனவெறி: சிட்னி கேளிக்கை பூங்காவில் இந்திய கர்ப்பிணிக்கு இடம் மறுப்பு

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகர கேளிக்கை பூங்காவில் நாற்காலி யில் இந்திய கர்ப்பிணியை அமர விடாமல் தடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஆஸ்திரேலியா வில் இந்தியர்களுக்கு எதிரான இனவெறி தாக்குதல்கள் அண்மை காலமாக அதிகரித்துள்ளன. இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் இந்திய கர்ப்பிணிக்கு நேர்ந்த கொடூரம் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உர்ஜித் படேல் என்ற இந்தியர் பணியாற்றி வருகிறார். இவர் சில நாட்களுக்கு முன்பு தனது கர்ப்பிணி மனைவி, 4 வயது மகளுடன் லூனா கேளிக்கை பூங்காவுக்கு சென்றுள்ளார்.

கர்ப்பிணி என்பதால் உர்ஜித்தின் மனைவியால் நீண்ட நேரம் நிற்க முடியவில்லை. அங் கிருந்த ஒரு நாற்காலியில் ஆஸ்திரேலிய பெண் ஒருவர் அமர்ந்திருந்தார். அவருக்கு அருகில் உர்ஜித்தின் மனைவி அமரச் சென்றார்.

அப்போது ஆத்திரமடைந்த அந்த ஆஸ்திரேலிய பெண், “இந்தியர்களை நான் வெறுக் கிறேன். என் அருகே இந்தியர்கள் அமரக்கூடாது. இங்கிருந்து ஓடிவிடு’ என்று கூறி தகாத வார்த்தைகளால் இந்தியா குறித்தும் இந்தியர்கள் குறித்தும் அவதூறாகப் பேசியுள்ளார்.

அந்த பெண் பேசியதை வீடியோவில் பதிவு செய்த உர்ஜித், அதை ட்விட்டரில் வெளி யிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

கடந்த மார்ச் மாதம் மெல் போர்ன் நகரில் இந்திய வம்சாவளியை சேர்ந்த கத்தோலிக்க பாதிரியார் டாமி என்பவரை ஒருவர் கத்தியால் குத்தினார். சில வாரங்களுக்கு முன்பு ஹோபர்ட் நகரில் இந்திய வம்சாவளி கார் ஓட்டுநர் ஜாய் என்பவர் தாக்கப்பட்டார். இதற்கு முன்பு ஆஸ்திரேலியாவில் படிக்கும் இந்திய மாணவர்கள் மீது பலமுறை தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன.