Mar 05

இலங்கை செல்லும் ரொரன்டோ முதல்வர் குழு

கனடாவின் தலைநகரான ரொரன்டோ மாநிலத்தின் முதல்வர் தலைமையிலான குழவினர் எதிர்வரும் 15ஆம் திகதி முதல் பத்து நாட்கள் விஜயம் மேற்கொண்டு இலங்கை மற்றும் இந்தியா ஆகிய இரண்டு நாடுகளுக்கு செல்லவுள்ளனர்.

ரொரன்டோ மாநில முதல்வர் ஜோன் ரொரி தலைமையில் 20 பேர் கொண்ட இக்குழுவில் பல்வேறு வர்த்தக மற்றும் தொழிற்சமுகத்தின் பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.

குறித்த குழுவானது இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் காணப்படும் முதலீட்டு வாய்ப்புக்களை விரிவாக ஆய்வு செய்யவுள்ளதோடு அரசாங்கம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் சந்திக்கவுள்ளது.

மேலும் இந்த குழுவின் விஜயத்தின் பின்னர் இலங்கை மற்றும் இந்தியாவில் புதிய முதலீடுகளை மேற்கொள்வதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.