Nov 15

மஹிந்தவின் கூட்டத்தில் திடீரென கலந்துகொண்ட சுசில் பிரேம்ஜயந்த

எதிர்வரும்  உள்ளூராட்சிமன்ற தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தரப்பையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தரப்பையும் இணைத்து களமிறக்குவதற்கான தீவிர முயற்சிகள்  தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 




அந்தவகையில் நேற்றைய தினம் நடைபெற்ற கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில்  அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த திடீரென கலந்து கொண்டு சமரச முயற்சிகைள முன்னெடுத்திருக்கிறார். 


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டு எதிரணியின் பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் கூட்டு எதிரணியில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சிகளினதும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். 


இதில் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கலந்து கொண்டு எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மைத்திரி மற்றும் மஹிந்த தரப்புக்கள் இணைந்த போட்டியிடுவதற்கான தேவை குறித்து வலியுறுத்தியிருக்கறார். எனினும் நேற்றைய தினம் அமைச்சர் சுசில் பிரேம ஜயந்தவினால் முன்னெடுக்கப்பட்ட இந்த சமரச முயற்சி வெற்றி பெறவில்லை என்றே தெரிகிறது.