Nov 15

ரஜரட்டை ரஜின கடுகதி ரயில் தடம்புரண்டது

வடக்கு ரயில் பாதையில் ரயில் சேவைக்கு தடையேற்பட்டுள்ளது.

மதவாச்சி மற்றும் பரசன்கஸ்வேவ ரயில் நிலையங்களுக்கிடையில் ரயில் ஒன்று தடம்புரண்டமையே இதற்கு காரணமாகும். மாத்தறையிலிருந்து வவுனியா நோக்கி சென்ற ரஜரட்டை ரஜின என்ற கடுகதி ரயில் நேற்று இரவு 8.45 மணியளவில் தடம்புரண்டுள்ளது.


இதன் காரணமாக இந்த ரயில் பாதையில் சேவையில் ஈடுபடும் ரயில் அனுராதபுரம் ரயில் நிலையம் வரையிலேயே பயணத்தை மேற்கொள்ளும்.

 

இதேபோன்று யாழ்ப்பாணத்திலிருந்து வரும் ரயில் மதவாச்சி வரையிலேயே பயணத்தை மேற்கொள்ளும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.


இதன் காரணமாக இன்று காலை 5.10 க்கு கல்கிசையிலிருந்து காங்கேசன்துறையிலான சேவையில் ஈடுபடும் நகரங்களுக்கிடையிலான ரயில்சேவை ரத்துச்செய்யப்பட்டுள்ளது.