May 02

தமிழ்பேசும் மக்களின் பெரும்பான்மை பாதுகாக்கப்படவேண்டும்

அம்பாரை அக்கரைப்பற்றில் 28-01-2017 திங்கட்கிழமை  நடைபெற்ற சரித்திர முக்கியத்தவம் வாய்ந்த தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தேசிய மேதின நிகழ்வில் கலந்து கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித்தலைவருமான இரா.சம்பந்தன் உரையாற்றுகையில்,

இந்த நாடு முன்னேற வேண்டுமானால் நிலையான நீதியான தீர்வு அனைவருக்கும் வழங்கப்படவேண்டும். அது நாட்டு மக்கள் அனைவருக்கும் தேவையானது. அதன் மூலமே நாடு அபிவிருத்தி அடையும்.

தமிழ்பேசும் மக்களின் பெரும்பான்மை பாதுகாக்கப்படவேண்டும் என்பதற்காகவே வடகிழக்கு இணைப்பை கோருகின்றோம். அதன் மூலமே எமது தமிழ்பேசும் சந்ததி பாதுகாக்கப்படும்.

வடகிழக்கில் வாழும் அனைத்து மக்களையும் நாங்கள் நேசிக்கின்றோம். அவர்களுடன் சமதானமாக வாழ விரும்புகின்றோம். அவர்களை நாங்கள் ஒருபோதும் எதிர்க்கவில்லை. அவர்களுக்கு நீதி நியாயமான தீர்வு கிடைக்க வேண்டும் என விரும்புகின்றோம். அதேவேளை நீதியும் நியாயமும் எங்களுக்குரியது.

அந்த வகையில் முஸ்லிம் தலைமைகளும் மக்களும், தமிழ் தலைமைகளும் மக்களும், ஒன்று கூடி பேசி இரு பகுதியும் ஏற்றுக் கொள்ளக்கூடிய நல்ல முடிகளுக்கு வரவேண்டும்.

தமிழ்பேசும் மக்கள் ஒற்றுமையாக வாழும்போதே அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளும் அநியாயங்கள் இல்லாமல் போகும் அப்போதுதான் நாம் அநீதிகளை தடுக்காலாம், விடுக்கலாம் மாற்றியமைக்கலாம். அதிகாரப்பகிர்வு வந்த பிறகு நாங்கள் பலவாறு செயற்படலாம்.

அம்பாரை மாவட்டம் தொடர்பில் பாரளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் முன்வைத்த கோரிக்கை நியாயமானது. உலகத்தில் பல்வேறு நாடுகளில் பல்வேறு உதாரணங்கள் இருக்கின்றன. இவ்வாறான பிரச்சினைகளை எவ்வாறு அனுகுவது, எவ்வாறு நியாயமான நீடித்து நிலைத்து நிற்க கூடிய தீர்வுகளை காண்பது போன்ற விடயங்களை நாம் படிக்க வேண்டும்.

முஸ்லிம் மக்கள் தமிழ் மக்களை ஏமாற்ற முடியாது. தமிழ் மக்கள் முஸ்லிம் மக்களை ஏமாற்ற முடியாது. நாங்கள் ஒற்றுமையாக பிரச்சினையை தீர்க்க வேண்டும். அந்த அழைப்பை நான் இச்சந்தர்ப்பத்தில் விடுகின்றேன் என்றார்