Nov 15

நெஸ்பி பிரபுவிற்கு இலங்கை அரசாங்கம் பாராட்டு

பிரித்தானியாவில் நெஸ்பி பிரபு இலங்கை தொடர்பில் மத்தியஸ்தம் வகித்தமைக்கு பாராட்டுக்களை தெரிவிப்பதாக வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் அவர் நேற்று இக்கருத்து வெளியிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

 

போர்க்காலத்தில் இடம்பெற்ற சம்பவத்தின் போது உயிரிழந்தோர்கள் தொடர்பில் நெஸ்பி பிரபுவின் கூற்றின் மூலம் இலங்கை இராணுவத்திற்கு எதிராக குற்றச்சாட்டுக்களை திருத்தி அமைக்க முடியும் என்று வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.