Nov 15

சபாநாயகர் - கடற்படை தளபதி சந்திப்பு

கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிரிமேவன் ரணசிங்க சபாநாயகர் கரு ஜயசூரியவை சந்தித்தார்.

பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் நேற்று இந்த சந்திப்பு இடம்பெற்றது.



இந்த சந்திப்பின்போது இலங்கை கடற்படையின் புதிய கடற்படைத் தளபதியாக கடமையேற்றுள்ள வைஸ் அட்மிரல் சிரிமேவன் ரணசிங்கவிற்கு தனது வாழ்த்துக்களை சபாநாயகர் தெரிவித்தார்.



இச்சந்திப்பில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் , இந்த நிகழ்வு நினைவுகூறும் வகையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன.