Nov 14

VLC பிளேயரிலும் 360 டிகிரி வீடியோ பார்க்கலாம்

360 டிகிரி வீடியோ விரும்பிகள், தங்களது VLC பிளேயரிலும் 360 டிகிரி வீடியோவை சும்மா சுழட்டி சுழட்டி பார்க்கலாம்

வீடியோவில் எல்லா பக்கத்தையும் பார்க்கும் 360 டிகிரி தொழில்நுட்பம் தற்போது பிரபலமாகிவிட்டது. விர்ச்சுவல் ரியாலிட்டி பாக்ஸ் மூலம் இந்த 360 டிகரி வீடியோக்களைப் பார்த்தால், பிரம்மிப்பூட்டும்.

இது இல்லாதவர்கள் ஆப் லைனில் எப்படி 360 டிகிரி வீடியோவை பார்ப்பது என்ற சந்தேகம் அனைவருக்கும் இருக்கும். அதற்காக தான் வந்திருக்கிறது விஎல்சி பிளேயரில் 360 டிகிரி.

VLC பிளேயரைப் பொறுத்தவரையில், அதன் சிறப்பம்சமே எல்லா பார்மட் வீடியோக்களையும் பிளே செய்வது தான். அதன் குறையாக இருந்தது 360 டிகிரி வீிடியோக்கள்.தற்போது அதுவும் சரியாகவிட்டது.

ஏற்கனவே, கடந்தாண்டு சோதனை முயற்சியில் இந்த சாப்ட்வேரை VLC நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு தந்தது. அது வெற்றி பெறவே, தற்போது அனைவரும் 360 டிகிரி வீடியோக்களை VLC 360 என்று சர்ச் செய்து பதவிறக்கம் செய்து கொள்ளலாம்.