Nov 14

நவம்பர் 13 தாக்குதல் - உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தினார் மக்ரோன்!

நேற்று திங்கட்கிழமை, நவம்பர் 13 தாக்குதலின் இரண்டாம் வருட நினைவேந்தலில் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் கலந்துகொண்டார். தாக்குதல் இடம்பெற்ற இடங்களை நேரில் சென்று பார்வையிட்ட மக்ரோன், பின்னர் பரிசில் இடம்பெற்ற அஞ்சலி நிகழ்விலும் கலந்துகொண்டார்.

நிகழ்வின் போது, உயிரிழந்த 130 பேர்களின் பெயர்களும் வாசிக்கப்பட்டதைத் தவிர,எவ்வித உரையாடல்களோ, இசையோ இடம்பெறவில்லை. மிக அமைதியாக அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.

ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன், முதல் பெண்மணி பிரிஜித் மக்ரோன், முன்னாள் ஜனாதிபதி பிரான்சுவா ஒலோந்து, பரிஸ் நகர முதல்வர் ஆன்-இதால்கோ உள்ளிட்ட பலர் அஞ்சலி நிகழ்வில் கலந்துகொண்டனர்.Bataclan திரையரங்கு ஆகிய இடங்களின் அஞ்சலி நிகழ்வுகள் வரிசையில் இடம்பெற்றது.

உள்துறை அமைச்சர் Gérard Collomb, இல்-து-பிரான்ஸ் மாகாண முதல்வர் Valérie Pécresse, நீதியமைச்சர் Nicole Belloubet, செனட் மேற்சபை முதல்வர் Gerard Larcher, பாராளுமன்ற சபாநாயகர் François de Rugy போன்றோரும் அஞ்சலி நிகழ்வில் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் மிக உணர்வுபூர்வமாக தனது அஞ்சலிகளை செலுத்தியதோடு, உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களின் உறவினர்களோடு நேரடியாக உரையாடினார்.