Nov 14

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம் - விரிவுரைகளிலும் பங்கேற்பு

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்ட போதிலும் பல்கலைக்கழக விரிவுரைகள் வழமைப்போல் நடைபெறுகின்றன.

யாழ் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் சைட்டத்திற்கு எதிரான ஆர்பாட்டங்களை கைவிட்டுள்ளனர். இன்றைய தினம் மாணவர்கள் தமிழ் கைதிகள் விடுதலை தொடர்பான ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டிருந்தனர்.


இவ்வாறான ஆர்ப்பாடட்ங்களில் மாணவர்கள் ஈடுப்பட்ட போதிலும் விரிவுரைகளில் கலந்து கொள்ளகின்றனர் என்று சிரேஷ்ட உதவிப்பதிவாளர் திரு. எட்வேட் றெஜினோல்ட் தெரிவித்தார்.

 

2017-2018 கல்வி ஆண்டுக்கான மருத்துவ பீட கற்கை நெறிகள் எதிர்வரும் 17 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. பொறியியல் பிரிவுக்கான பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு தற்போது 125 மாணவர்களுக்கான விரிவுரைகள் நடைபெற்று வருவதாக அவர் குறிப்பிட்டார்.

 

சட்ட பீடம் , கலைப்பீடம் மற்றும் மொழிபெயர்ப்பு உள்ளிட்ட கற்கை நெறிகள் எதிர்வரும் ஜனவரி மாதம் ஆரம்பமாகும் என்று தெரிவித்தார். கலைப்பீடத்தில் 503 மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டில் 495 மாணவர்கள் இதுவரையில் பதிவு செய்துள்ளனர்.

 

தமிழ் சிங்களம் முஸ்ஸிம் மாணவர்கள் இங்கு நடக்கும் விரிவுரைகளில் கலந்து கொள்கின்றனர் என்றும் அவர் மேலும் எமது செய்திப்பிரிவிற்கு குறிப்பிட்டார்.