Nov 14

நாட்டின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்யும் வரவு செலவுத்திட்டம்

வரவு - செலவுத்திட்ட யோசனையின் இரண்டாம் வாசிப்பின் மீதான நான்காம் நாள் விவாதம் இன்றாகும்.

நாட்டின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்யும் வரவு செலவுத்திட்டம் சமர்க்கப்பட்டுள்ளதாக வலியுறுத்தப்பட்டுள்ளது.


வெள்ளம், மண்சரிவு என்பனவற்றினால் இவ்வாண்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்கென மேலதிகமாக 700 கோடி ரூபாவை ஒதுக்க நேர்ந்ததாக விவாதத்தில் கலந்து கொண்ட உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.


18 ஆயிரத்து 22 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளின் அபிவிருத்திக்கென மூவாயிரத்து 505 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.


அரச ஊழியர்களுக்காக அதிகரிக்கப்பட்ட சம்பளத்தை வழங்கவென ஆயிரத்து 200 கோடி ரூபாவை ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

 

மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான வரவு - செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக விவாதத்தில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.கோடீஸ்வரன் தெரிவித்தார். வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்காக கூடுதலான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.



நாட்டின் பொருளாதாரம் தீர்மானம் மிக்க நிலையில் காணப்படுவதாகவும் விவாதத்தில் கலந்து கொண்ட இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.



நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையினால் நாடு சீர்குலைந்துள்ளதாக விவாதத்தில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் நளீன் டி ஜயதிஸ்ஸ சுட்டிக்காட்டினார்.