Nov 14

அல்லாவிடம் செல்கிறேன் அம்மா!' - பத்தகலோன் தாக்குதலாளியின் இறுதி வார்த்தைகள்!

நவம்பர் 13 தாக்குதல் இடம்பெற்று இன்றோடு இரண்டு வருடங்கள் ஆன நிலையில், பத்தகலோன் திரையரங்கில் தற்கொலை தாக்குதல் மேற்கொண்ட பயங்கரவாதி Fouad Mohamed Aggad, இறுதியாக தனது தாயாருடன் உரையாடிய தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

நவம்பர் 13, 2015 ஆம் ஆண்டு, தாக்குதலுக்கு இரண்டு மணிநேரங்களுக்கு முன்னர் இருந்தே பயங்கரவாதி Fouad Mohamed Aggad, பத்தகலோனில் இருந்துள்ளான்.

இரவு 11.55 மணி அளவில் ஸ்கைப் தகவல் சேவை வழியாக தனது தாயாருக்கு தகவல் அனுப்பியுள்ளான். தாயாருக்கு 'i love you'  என குறுந்தகவல் ஒன்றினை அனுப்பியிருந்தான். பின்னர் சில நிமிடங்கள் கழித்து, அவனது தாயார் 'எப்பிடி இருக்கிறாய் மகனே.. 'என பதிலனுப்பியுள்ளார். பின்னர் 'நான் அல்லாவிடம் செல்கிறேன் தாயே. எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள்!' என இறுதியாக தகவல் அனுப்பியிள்ளான்.அதன் பின்னரே தாக்குதலில் ஈடுபட்டுள்ளான்.

சக பயங்கரவாதிகளை தொடர்புகொள்ள வைத்திருந்த கைத்தொலைபேசி தாக்குதலில் உடைந்து நொருங்கிவிட்டது. ஆனால் இணையத்தில் பதிவேறிய தகவல்கள் அழியாமல் இருந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்ததோடு, இந்த தகவலை இரண்டு வருடங்களின் பின்னர் இன்று திங்கட்கிழமை வெளியிட்டுள்ளனர்.