Mar 05

தேசிய அரசாங்கத்திற்கு அறிவுரை கூறும் மகிந்த

பொரலஸ்கமுவ பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ,

நாட்டில் காவல் நிலையமும் சிறைச்சாலையும் இருந்தால் நாட்டை ஆட்சி செய்ய முடியும் என சிலர் இன்று நினைத்துள்ளனர்.

 இன்று ஆட்சியாளர்கள்  தம்மை விட அரசியல் தெரிந்த ஆட்சி அதிகாரம் தெரிந்த எவரும் இல்லை என்ற நிலைப்பாட்டில் ஆட்சி செய்கின்றனர்.

தமக்கு சட்டம் தெரியும், வைத்தியத் துறை தெரியும் எம்மை விட தெரிந்தவர்கள் எவரும் இல்லை என நினைக்கின்றனர். ஆகவே நாம் எடுப்பது தான் சரியானதும் இறுதியுமான தீர்மானம் என கருதுகின்றனர்.

எனது ஆட்சியில் அரச சேவையாட்களை நான் பாதுகாத்தேன். அரச ஊழியர் மனிதாபிமான அடிப்படையில் செய்யும் தவறுகள் எவையும் தவாறாக கருதப்படாது என்ற கொள்கையில் நாம் செயற்பட்டோம்.

அரச சேவையாட்கள்  தைரியமாக தமது தீர்மானங்களை முன்னெடுங்கள் நீங்கள் எடுக்கும் வேலைத்திட்டங்களின் பின்னணியில் நாம் இருந்து பலப்படுத்துவோம் என நான் தெரிவித்தேன்.

அதுவே எமக்கு வெற்றியாகவும் அமைந்தது. எனினும் பிற்காலதில்  இவ்வாறு நிதிக் குற்றப்பிரிவு  என்ற ஒன்று  உருவாகும் என எமக்கு தெரியாது.

இந்த ஆட்சியில் அரச ஊழியர்கள் அதிகமாக தண்டிக்கப்படுகின்றனர். இந்த ஆட்சியில் இதுவரையிலான காலத்தில் 2000 ஆயிரம் அரச அதிகாரிகள் நிதிக் குற்றப் பிரிவினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

பலர் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளனர். அரசியல் வாதிகள் சிறைச்சாலைக்கு செல்வது பிரச்சினை இல்ல. இப்போதும் எமது அங்கத்தவர்கள் சிலர் சிறையில் உள்ளனர் என்றார்