Nov 13

நவம்பர் 13 தாக்குதல் - இன்று இரண்டாம் வருட நினைவு!

130 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்படுவதற்கு காரணமான நவம்பர் 13, தாக்குதல் இடம்பெற்று இன்றோடு இரண்டு வருடங்கள் ஆகின்றன.

இன்றைய நாளில் பல்வேறு பகுதிகளில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற உள்ளன.2015 ஆம் ஆண்டு நவம்பர், 13 ஆம் திகதி பல்வேறு இடங்களில் இஸ்லாமிய தேச பயங்கரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டனர். துப்பாக்கிச்சூடு, தற்கொலை தாக்குதல் போன்ற தாக்குதலில் 130 பேர் கொல்லப்பட்டனர்.

பயங்கரவாத தாக்குதலில் 130 பேர் இறப்பது இதுவே பிரான்சில் முதன் முறை. Stade de France மைதானம், பத்தாம் வட்டாரத்தில் உள்ள Rues Bichat et Alibert, Rue de la Fontaine-au-Roi, பத்தகலோன் திரையரங்கம், Rue de Charonne மற்றும் Boulevard Voltaire ஆகிய இடங்களில் சிறிது நேர இடைவெளியில் பயங்கரவாதிகள் தாக்குதலை நடத்தியிருந்தனர். இதில் பத்தகலோன் திரையரங்கில் மாத்திரம் 90 பேர் கொல்லப்பட்டனர்.

மொத்தமாக 9 பயங்கரவாதிகள் தாக்குதலை நடத்தியிருந்தனர். அதில் இருவர் தற்கொலைக் குண்டுத்தாக்குதல் நடத்தியிருந்தனர். மீதமுள்ள 7 பயங்கரவாதிகளும் துரத்தப்பட்டு RAiD படையினரால் கொல்லப்பட்டனர். தாக்குதலில் மொத்தமாக 413 பேர் காயமடைந்திருந்தனர்.

இஸ்லாமிய தேச பயங்கரவாதிகள் இந்த தாக்குதல்களுக்கு உரிமை கோரியிருந்தனர்.தாக்குதல் இடம்பெற்று சில மணிநேரங்களில் அவசரகாலச் சட்டம் நடைமுறைப்படுத்தபட்டது. பின்னர் அது பல்வேறு தடவைகள் நீட்டிக்கப்பட்டு இரண்டு வருடங்களின் பின்னர் கடந்த நவம்பர் 1 ஆம் திகதி அவசரகாலச் சட்டம் விலக்கப்பட்டது.