May 01

மேதினத்தை துக்கதினமாக அனுஸ்ரித்த காணாமல் போனோரின் உறவினர்கள்

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்றைய தினம் இடம்பெறும் தொழிலாளர் தினத்தை புறக்கணித்து துக்கதினமாக அநுஸ்ரித்து வருகின்றனர்

முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக கூடாரம் அமைத்து போராடிவருகின்ற  காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்று 55   ஆவது நாளாக இந்த வீதி ஓரத்தில் போராடிவருகின்றனர்

ஆனால் இந்த அரசாங்கமானது எமக்கு எந்தவித தீர்வுகளையும் முன்வைக்காத நிலையில் இன்றும் போராட்டம் முன்னேடுக்கப்பட்டுவருகிறது

இந்நிலையில் இன்றைய தொழிலாளர் தினத்தை புறக்கணித்து துக்கதினமாக அனுஸ்ரித்துவருகின்றனர் தொழிலாளர்களின் உரிமைகளை கோரி இடம்பெறுகின்ற இந்த தினத்தில் தொழில் புரியும்   தமது உழைக்கும் வர்க்கமான கணவன் உறவுகளையே தொலைத்துள்ள நாம் என்ன உரிமைகளை கோருவது இவ்வாறு எமது உறவுகள் இல்லாது உழைத்து எமது குடும்பங்களை பார்க்க யாருமற்ற நிலையில் வாழ்வாதார ரீதியாக பல்வேறு துன்பங்களை சந்திக்கின்றோம் எமது உறவுகளை கோரி நாம் வீதியிலிறங்கி போராடிவருகின்றபோதும் எமக்கு இதுவரை எந்த தீர்வும் இல்லை

உழைக்கும் எமது உறவுகளற்ற நிலையில் எமக்கு எதுக்கு தொழிலாளர் தினம் யாருக்கு உரிமைகோரி  இந்த தினம் எனவே நாம் இதனை புறக்கணிக்கிறோம் என தெரிவித்து கறுப்பு பட்டிகலணித்து துக்கதினமாக அனுஸ்ரிக்கின்றனர்.