May 01

காணாமல் ஆக்கப்பட்ட கொலை செய்யப்பட பழங்குடி இனப் பெண்கள் தொடர்பான விசாரணை பின்போடப்பட்டது

காணாமல் ஆக்கப்பட்ட,  கொலை செய்யப்பட்ட பழங்குடி இனப் பெண்கள் தொடர்பாக ஏப்ரல் மாத நடுப்பகுதியில் ஆரம்பமாக இருந்த தேசிய விசாரணை பின்போடப்பட்டுள்ளது.

சடுதியாகப் பிற்போடப்பட இந்த விசாரணை, மீண்டும் எப்போது ஆரம்பமாகும் என்பது தொடர்பாக எதுவிதமான அறிவித்தல்களும் விடுக்கப்படவில்லை.

தற்பொழுது தொழில் அமைச்சராக உள்ள பற்றீசியா ஹஜ்டு அவர்கள்,. பெண்கள் விவகார அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில், இவ்விசாரணை தொடர்பாக 2015 ஆம் ஆண்டின் இறுதியில்  அறிவித்தல் விடுத்த மூன்று அமைச்சர்களில் அவரும் ஒருவராக இருந்தார்.

ஆயினும் அவர் அண்மையில் அவர் தொழில் அமைச்சராக நியமிக்கப் பட்டதன்  பின்னரும், இந்த விடயம் தொடர்பாக தனது  தொகுதி மக்களிடம் இருந்து அறிந்து வருகிறார்.

ஏப்ரல் மாதத்தில் திட்டமிடப்பட்டிருந்த விசாரணை அமர்வுகளின் போது, இக்கொலைச் சம்பவங்களில் உயிர்பிழைத்தோர் , அவர்களது  குடும்ப அங்கத்தவர்கள் ஆகியோருடன் கலந்துரையாடி அவர்களது ஆலோசனைகளைக் கேட்டறிவதற்குத் திட்டமிடப்பட்டிருந்தது.

விசாரணை அமர்வுகளில் தாமதங்கள் ஏற்பட்டுள்ள போதும், விசாரணை ஆணைக்குழுத் தலைவரில் தனக்கு நம்பிக்கை இருப்பதாகவும், இத்தாமதம் பழங்குடி மக்கள் தொடர்பாக மேற்கொள்ளப்படும் ஏனைய  திட்டங்களில் பாதிப்புக்களை ஏற்படுத்தாது எனவும் அமைச்சர் ஹஜ்டு தெரிவித்துள்ளார்.