May 01

வாழ்க்கைத் துணையைக் கனடாவிற்கு வரவழைக்கும் நிபந்தனைகளைத் தளர்த்தியது லிபரல் அரசு

வாழ்க்கைத் துணையை கனடாவிற்கு வரவழைத்ததன் (Spousal sponsorship) பின்னர், வரவழைக்கப்பட்டவர்  கனடாவில் நிரந்தர வதிவுரிமை  பெற இரண்டு வருடங்கள் இணைந்து வாழவேண்டும் என்ற நிபந்தனைய லிபரல் அரசு சென்ற வாரம் இரத்துச் செய்துள்ளது.

கனடாவின் குடிவரவு அமைச்சர்ர அஹமட் ஹுசேன் அவர்களினால் சென்ற வாரம் வெளியிடப்பட்ட  இவ்வறிவித்தல், குடிவரவுச் செயற்பாட்டாளர்களினால் பெரிதும் பாராட்டப்பட்டுள்ளது. “நிபந்தனைக்குட்பட்ட நிரந்தர வதிவுரிமை” (Conditional permanent residency) என அழைக்கப்படும் இந்த விதிமுறை, கனடாவிற்குள் நுழைவதற்காக நடாத்தப்படும் போலி திருமணங்களைத் (marriage frauds) தடுத்து நிறுத்தும் முகமாக,  முன்னைய பழமைவாத அரசினால் 2012 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இது  தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த குடிவரவு அமைச்சர், வாழ்க்கைத் துணையை வரவழைக்க மேற்கொள்ளப்படும் விண்ணப்பங்களில் பெரும்பாலானவை, உண்மையானவை எனவும் நல்ல எண்ணத்துடனேயே மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.