Nov 13

மீன்பிடித் தொழிலை மேற்கொள்ள தடை

மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்கு உற்பட்ட முள்ளிவட்டவான் கிராம சேவையாளர் பிரிவின் நன்நீர் மீன் பிடியாளர்கள் எதிர் நோக்கும் பாரிய பிரச்சினைகளில் ஒன்று தமது வாழ்வாதார  நடவடிக்கைகளில் மிகப் பிரதானமான மீன்பிடித் தொழிலை மேற்கொண்டு செல்வதற்கான தடையாகும்.  

மட்டக்களப்பு முள்ளிவட்டவான் கிராமம் கடந்த யுத்தம் மற்றும் இயற்க்கை அணர்த்ததினால் படுமோசமாகவே பாதிக்கப்பட்டது. யுத்தத்திற்கு முன்னர் இக்கிராமத்தில் தமிழர்களும், முஸ்லிம்களும் ஒன்றரக்கலந்து வாழ்ந்து வந்தனர். 

இப்பிரதேசத்தில் 1985க்கு பிறகு தழிழ் ஈழ போராட்டம் வலுப்பெற தொடங்கியது தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் உள்ள சகோதரத்துவ எண்னங்கள், நல்ல புரிதல்கள் ஏனைய சமூகங்களுக்கிடையிலான நல்லுறவுகள் இதனால் சீர்குழைந்தது. 

இனவாத குழுக்களினால் திட்டமிடப்பட்டு அப்பாவி தமிழர்களினதும், முஸ்லிம்களினதும் சொத்துக்கள் சூரயாடப்பட்டன. 

இதனால் இக்கிராமங்களில் வாழ்ந்த மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி இடம் பெயர்ந்தனர். இது இக்கிராம மக்களின் வரலாற்று பக்கங்களில் ஒரு கசப்பானதொரு நிகழ்வாகும். யுத்தம் இம் மக்களின் சமூக பொருளாதார நடவடிக்கைகளில் பாரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. 

யுத்தத்திற்கு பின்னர் மீள்குடியேறிய இம்மக்கள் தமது பிரதான ஜீவனோபாயமான நன்னிர் மீன்பிடி, விலங்கு வேளாண்மை விவசாயத்திற்கு திறும்பினர் இருப்பினும் தாம் பரம்பறை பரம்பறையாக வாகனேரி  குளத்தில் செய்து வந்த மீன்பிடி தொழிலினை மேற்கொள்ள 120க்கு மேற்பட்ட மீனவ குடும்பங்களுக்கு சுமார் 2 வருட காலமாக வாய்ப்பு மறுக்கப்பட்டு வருவதாக அக்கிராமத்தின் ஆமிலா மீனவர் கூட்டுறவுச் சங்க அமைப்பும், மீனவர்களும் குற்றம் சுமத்தி வருகின்றனர்.

453 ஹெக்டயர் நீர்பரப்பினை கொண்ட மட்டக்களப்பு வாகனேரி  குளமானது இப்பிரதேசத்தின் விவசாயம், குடிநீர், கால்நடை வளர்ப்பு போன்ற அடிப்படை தேவைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றது. அத்தோடு இக்குளத்தில் பிடிக்கப்படும் மீன்களுக்கு அப்பிரதேச மக்களிடையே அதீத கிராக்கி நிலவி வருகின்றது. 

இருப்பினும் இக்குளத்தில் மீன்பிடிப்பதற்கு  வாகனேரி கிராமிய மீனவர் அமைப்பினை சேர்ந்த 130 மீனவர்களுக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இம்மீனவர்களினால் நாள் ஒன்றுக்கு 300 தொடக்கம் 400 கீலோ மீன்கள் பிடிக்கப்படுகின்றன ஒரு மீனவரின் மாதாந்த வருமானம் 15 ஆயிரம் தொடக்கம் 20 ஆயிரம் ரூபாய்களாகும்.

இவ்வருடம் இக்குளத்தில் நான்கு இலட்சத்து ஐம்பதரிரம் மீன் குஞ்சுகள் இடப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட நீர் உயிரின வளர்ப்பு விரிவாக்கல் அதிகாரி ஜேக்கப் நெல்சன் தெரிவித்தார். 

இவ்வாரான சூழ்நிலைகளுக்கு மத்தியில்  புனானை அனைக்கட்டு முள்ளிவட்டவான் கிராமத்தின் ஆமிலா மீனவர் கூட்டுறவுச்சங்க அமைப்பை சேர்ந்த மீனவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதுடன் அவர்களது வள்ளங்கள்  மாவட்ட நீர் உயிரின வளர்ப்பு விரிவாக்கல் அதிகாரி; தலைமையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் பிற்பாடு வாழைச்சேனை பொலீசாரின் உதவியுடன்   பறிமுதல் செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளது. 

இருந்த போதிலும் குறித்த மீனவ அமைப்பினருக்கு மீன்பிடிப்பதற்கான உரிமை அவர்களுக்கு வழங்கப்பட வில்லை இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் உரிய அனுமதியினை கோரியும் அவர்களுக்கு எவ்வித தீர்வுகளும் வழங்கப்படவில்லை என கவலை தெரிவிக்கின்றனர். 

எது எவ்வாறாயினும் நிர்க்கதியாகியுள்ள இக்கிராம மீனவர்களின் வாழ்வாதார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான வசதி வாய்ப்புக்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் துரிதகதியில் ஏற்படுத்தி தர வேண்டும் என்பது மக்களின்; எதிர்பார்ப்பாகும்.