Mar 05

புதிய அரசியலமைப்பிற்கு இடமளிக்க கூடாது

புதிய அரசியலமைப்பிற்கு இடமளிக்க கூடாது என கலாநிதி தயான் ஜயதிலக தெரிவித்தார்.

பொரலஸ்கமுவ பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட  கலாநிதி தயான் ஜயதிலக மேலும் கூறுகையில்,

அரசாங்கம்  சர்வதேச தரப்பினருக்கு பொய்யான வாக்குறுதிகளை வழங்க வேண்டாம்.

அரசியலமைப்பு தொடர்பில் அரசாங்கம் கருத்துக்களை முன்வைத்து வருகின்றது. எனினும் அரசியலமைப்பில் முன்னெடுக்கும் பாரிய மாற்றம் இந்த நாட்டை முழுமையாக தவறான பாதையில் கொண்டு சென்று விடும் என்பதே உண்மையாகும்.

நல்லிணக்கத்தை உருவாக்கவும் தீர்வை பெற்றுக்கொடுக்கவும் அரசியல் அமைப்பில் முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றதாக கூறுகின்றனர்.

இப்போது இந்த நாட்டிற்கு திணித்துள்ள 13 ஆம் திருத்தும் முழுமையாக நடைமுறைப்படுத்தும் அச்சுறுத்தலாக தன்மைகளை அரசியல் அமைப்பின் மூலம் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.

தற்போது அவற்றை நீக்கி பூரண அதிகாரங்களை வழங்கும் முயற்சிகளே இந்த அரசியல் அமைப்பை மாற்றும் நடவடிக்கை மூலம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

ஆகவே அரசியல் அமைப்பு திருத்தம் செய்வது அதிலும் சிறிய மாற்றங்களை கொண்டுவருவது ஏற்றுக்கொள்ள முடியும் ஆனால் புதிய அரசியல் அமைப்பிற்கு இடமளிக்க கூடாது.

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையில் பாராளுமன்றமும் மிகச்சரியாக செயற்பட வேண்டும் எவ்வாறு செயற்பட்டால் அதுவே நாட்டை இணைக்கும் முயற்சியிலும் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் நகர்விலும் வெற்றி பெற முடியும். ஆகவே நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்க இடமளிக்க கூடாது என்றார்