Apr 30

ஸ்டாலினின் குற்றச்சாட்டை குழந்தைகூட நம்பாது

தமிழகத்தில் ஆட்சியை நிலைகுலையச் செய்ய மத்திய பா... அரசு திட்டமிடுகிறது என்ற ஸ்டாலினின் குற்றச்சாட்டை குழந்தைகூட நம்பாது என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.

தி.மு.. செயல் தலைவர் மு..ஸ்டாலின் ஒரு எதிர்க்கட்சித் தலைவராக சில திருத்தமான கருத்துகளை தெரிவித்து வருகிறார் என நினைத்தேன். ஆனாஸ், தினம் ஏதாவது சொல்ல வேண்டும் என்பதற் காக கருத்துகளை திரித்து சொல்ல ஆரம்பித்திருக் கிறார்.

தமிழகத்தில் நிலையற்ற ஆட்சியை உருவாக்கவும், .தி.மு..வை உடைக்கவும், இணைக்கவும் பா.ஜக. முயன்று வருவதாக அபாண்ட மான குற்றச்சாட்டை கூறி யிருக்கிறார்.

ஸ்டாலினின் இந்தக் குற்றச்சாட்டை ஒரு குழந்தைகூட நம்பாது. எந்நேரமும் தேர்தல் வரலாம். ஸ்டாலின் முதல்வர் ஆவார் என தி.மு.. முதன்மைச் செயலாளர் துரைமுருகன் போன்றவர்கள் பேசி வருகின்றனர்.

ஆனால், .தி.மு.. ஆட்சியை நிலைகுலையச் செய்ய பா.. .திட்டமிடுகிறது என .தி.மு..வுக்கு ஆதர வாக ஸ்டாலின் கருத்து கூறியிருக்கிறார்.

விஞ்ஞானப்பூர்வமாக ஊழல் செய்தவர்கள் என அரச ஆணையத்தில் பட்டம் சூட்டப்பட்ட தி.மு..வினர் ஊழலில் சம்பாதித்த பணத்தைத்தான் முதலில் பறிமுதல் செய்ய வேண்டும்.

இன்று சாராய ஆலை, தனியார் கல்லூரி நடத்து பவர்களாகவும், அரசியல் சார்ந்த செல்வந்தர்களாகவும் தி.மு..வினரே அதிக அளவில் உள்ளனர். டில்லியில் போராட்டம் நடத்திய அய்யாகண்ணு, ஸ்டாலினை சந்தித்துப் பேசியுள்ளார்.

மத்திய அமைச்சர்கள் பலமுறை பேசியும் பிரதமரின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயற்படுபவர்களின் பின்னணியில் தி.மு.. இருக்கிறது என்ற சந்தேகம் எழுகிறது. இதனால் எதற்கெடுத்தாலும் பா...வை குறைகூறி ஸ்டாலின் பேசி வருகிறார்.

இன்று சாராய ஆலை, தனியார் கல்லூரி நடத்து பவர்களாகவும், அரசியல் சார்ந்த செல்வந்தர்களாகவும் தி.மு..வினரே அதிக அளவில் உள்ளனர். டில்லியில் போராட்டம் நடத்திய அய்யா கண்ணு, ஸ்டாலினை சந்தித்துப் பேசியுள்ளார்.

மத்திய அமைச்சர்கள் பலமுறை பேசியும் பிரதமரின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயற்படுபவர்களின் பின்னணியில் தி.மு.. இருக்கிறது என்ற சந்தேகம் எழுகிறது என தெரிவித்துள்ளார்