Apr 30

வழக்கு குறித்து கருத்து சொல்ல முடியாது

வழக்கு குறித்து தற்போது எந்த கருத்தும் சொல்ல முடியாது என  அதி.மு.. துணைப்பொதுசெயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.

இரட்டை இலைசின்னம் பெறுவதற்காக இலஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் .தி.மு..அம்மா அணியைச் சேர்ந்த தினகரனை டில்லி பொலிஸார் கைது செய்தனர்.

தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட அவர் பொலிஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதனையடுத்து டில்லி  பொலிஸார் தினகரனை சென்னைக்கு அழைத்து வந்து சென்னையின் பல்வேறு பகுதிகளில் விசாரணை நடத்தியது. பின்னர் டில்லிக்கு அழைத்து செல்லப்பட்டார்.

இந்நிலையில் புதுடில்லி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடையே பேசிய அவர் , வழக்கு குறித்து தற்போது எந்த கருத்தும் சொல்ல முடியாது என கூறினார்.

தொடர்ந்து அவர் டில்லி குற்றப்பிரிவு பொலிஸாரினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.