Apr 30

கியூபாவில் இராணுவ விமானம் விபத்து 8 பேர் பலி

மேற்கு கியூபாவில் இராணுவ விமானமொன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த அனைத்து 8  பேரும் உயிரிழந்துள்ளனர்.

 இரட்டை இயந்திரங்களைக் கொண்ட அந்தோனோவ் ஏ.என்.-26  விமானமே   அர்தெமிஸா பிராந்தியத்தில் இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

தலைநகர் ஹவானாவிற்கு வெளியிலுள்ள  பிளயா பரகோவா எனும் இடத்திலிருந்து அந்த விமானம் பயணத்தை மேற்கொண்டிருந்தது.

இந்த விபத்துக்கான காரணம் அறியப்படவில்லை.  இந்நிலையில் இது தொடர்பில் பிராந்திய அதிகாரிகள் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.