ஜெம் தொலைக்காட்சியின் ஸ்தாபகரான ஈரானியர் சுட்டுக் கொலை
பேர்ஸிய மொழி ஜெம் தொலைக்காட்சியின் ஸ்தாபகரும்
தலைவருமான சயீத் கரிமியன்
துருக்கிய இஸ்தான்புல் நகரில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
ஈரானியரான அவர்
குவைத்தைச் சேர்ந்த தனது வர்த்தகப் பங்காளர் ஒருவர் சகிதம் மஸ்லக் பிராந்தியத்துக்கு
அருகில் வாகனத்தில் பயணித்த வேளையில் மேற்படி துப்பாக்கிச் சூடு நடத்தப்படவுள்ளது.
இந்நத சம்பவத்தில் சயீத் கரிமியனுடன் குறிப்பிட்ட வர்த்தகப் பங்காளரும்
உயிரிழந்துள்ளார்.
படுகொலைத் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட
வாகனம் பின்னர் எரியூட்டப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஈருானுக்கு எதிரான கருத்துகளை பரப்பிய
குற்றச்சாட்டில் சயீத் கரிமியனுக்கு அவர் ஆஜராகாத நிலையில் ஈரானிய நீதிமன்றமொன்று 6 வருட சிறைத்தண்டனை விதித்துள்ளமை
குறிப்பிடத்தக்கது.