Apr 30

ஊடகவியலாளர்கள் மீது டொனால்ட் ட்ரம்ப் பாய்ச்சல்

 அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தான் பதவியேற்று 100 ஆவது நாளைக் குறிக்கும் வகையில் பென்சில்வேனியா மாநிலத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றுகையில் அந்நாட்டு ஊடகங்களுக்கு எதிராக கடும் கண்டனத்தை  வெளியிட்டுள்ளார்.

 தான் தேர்தல் பிரசார காலத்தில் அளித்த வாக்குறுதிகளை ஒன்றன் பின் ஒன்றாக நிறைவேற்றி வருவதாக குறிப்பிட்ட அவர்,   தன்னுடன் தொடர்பிலில்லாத  ஊடகவியலாளர்கள் போலியான செய்திகளை வெளியிட்டு வருவதாக குற்றஞ்சாட்டினார்.

 ஊடகங்களுக்கு தனது முதல் 100  நாட்களிலான சாதனைகள்  தொடர்பான  அவற்றின் அறிக்கைகள் குறித்து  மிகவும் மோசமான தோல்வியான தரத்தை வழங்கவேண்டியுள்ளதாக  டொனால்ட் ட்ரம்ப் கூறினார்.

தனது 100  நாள் பதவிக் காலம் பரவசமூட்டத்தக்கதாகவும் ஆக்கபூர்வமாகவும் அமைந்ததாக குறிப்பிட்ட அவர்தான் வேலைவாய்ப்புகளிலான திருட்டை முடிவுக்குகொண்டு வந்து நிலக்கரிக்கு எதிரான போரை தடுத்து நிறுத்தி  அமெரிக்காவுக்கு அனுகூலமளிக்காத சர்வதேச உடன்படிக்கைகளை வாபஸ் பெற்று  ஒவ்வொரு தினத்திலும் பணியாற்றியுள்ளதாக  தெரிவித்தார்.

டொனால்ட் ட்ரம்ப்  வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற  ஊடகவியலாளர்களுக்கான வருடாந்த மாலை விருந்துபசார நிகழ்ச்சியில் கலந்துகொள்வதை தவிர்த்து மேற்படி கூட்டத்தில்  பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

1981  ஆம் ஆண்டு  மறைந்த முன்னாள் ஜனாதிபதி  டொனால்ட் ரேகனுக்கு பின்னர் இந்த வருடாந்த ஊடகவியலாளர் கூட்டத்தில்  கலந்துகொள்ளாத முதலாவது  அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் விளங்குகிறார்.